அசாம் மாநிலம் கௌஹாத்தியில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாமாயில் விவசாயம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, "அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.11,040 கோடி மதிப்பில் பாமாயில் உற்பத்தித் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வட கிழக்கு மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரித்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
அங்கு விதை மையங்கள், பாசன வசதிகள், தொழில்நுட்ப வசதிகள், ஆலைகள், கொள்முதல் நிலையங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை விரைவில் கட்டமைக்கப்படும்" என்றார்.