தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிச.31 வரை கடுங்குளிர் நிலவும் - வானிலை ஆய்வு மையம் - வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவ வாய்ப்பு

டெல்லியில் இன்று கடுங்குளிர் நிலவியது. சில இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. குளிர் மற்றும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

North
North

By

Published : Dec 27, 2022, 12:32 PM IST

Updated : Dec 27, 2022, 2:26 PM IST

டெல்லி: நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் இன்று(டிச.27) கடுங்குளிர் நிலவியது. காலை நேரத்தில் மிகுந்த பனிமூட்டம் காணப்பட்டது. டெல்லியில் ஒரு சில பகுதிகளில் வெப்பநிலை 3 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதனால் உறைய வைக்கும் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அடுத்த 48 மணி நேரத்தில் உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் மேற்கு ராஜஸ்தானில், ஒரு சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் கடுங்குளிர் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வரும் 31ஆம் தேதி வரை கடுங்குளிர் நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பீகாரில் 11 வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி

Last Updated : Dec 27, 2022, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details