தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Gujarat Election Result: வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக! - Gujarat Assembly Election Result 2022

வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த இடங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி, காங்கிரசின் KHAM அதாவது க்ஷத்திரியா, ஓபிசிக்கள், ஆதிவாசி மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெறும் வியூகத்தின் மீதான மரணஅடி என எழுதுகிறார் ஈடிவி பாரத்தின் கே. பிரவீண் குமார்.

Gujarat Election Result: வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் கோட்டையை கைப்பற்றிய பாஜக!
Gujarat Election Result: வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் கோட்டையை கைப்பற்றிய பாஜக!

By

Published : Dec 8, 2022, 4:31 PM IST

Updated : Dec 9, 2022, 4:45 PM IST

ஹைதராபாத்: குஜராத்தின் வடக்கு மாவட்டங்களில் ஜாட் சமூகத்தினரின் எழுச்சியை சமாளித்து தேர்தலில் வென்றிருக்கிறது பாஜக. இன்னும் சொல்லப்போனால் காங்கிரசின் கோட்டையான ஆரவல்லி, பாணஸ்கந்தா மாவட்டங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது பாஜக. வடக்கு குஜராத்தின் பிரபலமான சமூகமான சவுத்திரிக்கள், ஒருகாலத்தில் பாஜகவின் பாரம்பரிய வாக்குவங்கியாக இருந்தனர். ஆனால் பின்னர் அந்த சமூக தலைவரான விபுல் சவுத்ரி கைது சம்பவங்களால், பாஜகவுக்கு எதிராக ஆவேச குரல்கள் எழுந்தன. ஆனாலும் பாஜகவின் பின்னால் இந்த தேர்தலில் சவுத்ரிக்கள் அணிவகுத்திருப்பது தங்களின் அதிருப்தியை தற்காலிகமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் எனவே எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் பாஜகவும் இதில் சளைத்ததல்ல சவுத்ரி சமூகத்தின் ஒற்றுமையை சாதுரியமாக உடைத்த பாஜக, விபுல் சவுத்ரியின் தொழில் போட்டியாளரான சங்கர் சவுத்ரியை அரசியலில் பயன்படுத்திக் கொண்டது என்றே கூற வேண்டும். தொழிலில் முதன்மை ஏற்பதிலும் விபுலின் தூத்சாகர் டைரி, ஷங்கரின் பாணஸ்கந்தா டைரியும் கடும் போட்டியில் உள்ளன.

இதற்கிடையே ஆம் ஆத்மியும் பாஜகவுக்கு பேருதவி புரிந்திருக்கிறது. சவுத்ரி சமுதாயத்தின் கூட்டமைப்பான அற்புத சேனாவின் ஆதரவைப் பெற முயன்ற ஆம் ஆத்மி அதில் தோல்வி அடைந்தாலும், சவுத்ரிக்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் பாஜகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதன் மூலம் பாஜக மீது அதிருப்தியில் இருந்த சவுத்ரி சமுதாயத்தினரும் கூட, காங்கிரசுக்கு பதிலாக ஆம் ஆத்மியையே தேர்வு செய்துள்ளனர்.

வடக்கு குஜராத்தில் உள்ள 32 தொகுதிகளில் 24 ஐ பாஜக கைப்பற்றியுள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு பெற்ற தொகுதிகளை விடவும் 10 தொகுதிகள் அதிகமாகும். ஆனால் மறுபுறம் காங்கிரசோ 2017ல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 6 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் வசமிருந்த ஆரவல்லி மாவட்டத்தின் பிலோதா தொகுதியில் பாஜகவின் அதிருப்தியாளரை களமிறக்கிய ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு கடுமையான போட்டியை அளித்தது. அக்கட்சியின் ரூப்சிங் பகோடா 2 வது இடத்தை பிடித்தார். காங்கிரஸ் வசமிருந்த தனேரா தொகுதியிலும், சுயேட்சையாக களமிறங்கிய மாவ்ஜி தேசாய் அதிர்ச்சியளித்தார். இவர் சவுத்ரி சமூகத்தின் பிரபலமான தலைவராவார்.

காங்கிரசின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். இவர் 2017ம் ஆண்டு சுயேட்சையாக களமிறங்கி காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்தார். தனி தொகுதியான வட்காம் 2017ல் ஜிக்னேஷ் மேவானிக்கு பெரும் வெற்றியை கொடுத்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் பாஜக முன்னிலை பெற்றாலும் ஜிக்னேஷின் வெற்றி காங்கிரசுக்கு சற்றே ஆறுதல் அளித்திருக்கும். காங்கிரசுக்கு நிகழ்ந்திருக்கும் கசப்பான உண்மை என்னவென்றால் அவர்களின் பாரம்பரியமான தலித் வாக்கு வங்கி இந்த தேர்தலில் கைவிட்டுள்ளது. க்ஷத்ரியா பிரிவைச் சேர்ந்த ஜெகதீஷ் தாக்கூரை மாநில காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்த போதும் ஓ.பி.சி.வாக்கு வங்கியை தக்கவைக்க முடியவில்லை. செளத்ரி சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிவாசிகள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ற காங்கிரஸின் வாக்கு பெட்டகத்தை பாஜக கலைத்துள்ளது.

துவங்கும் முன்பே தோல்வியடைந்த காங்கிரஸ்

குஜராத்தில் குறிப்பாக வடக்கு பகுதியில் காங்கிரஸ் பிரசாரத்தில் பெரிய தலைவர்கள் பங்கெடுக்கவில்லை. பாரம்பரிய வாக்கு வங்கி கொண்ட இந்த பகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது தங்களுக்கு பலனளிக்கும் என காங்கிரஸ் நம்பியது. பாஜகவின் நிர்வாகக் குறைபாடுகளை கூறுவது சாதகமளிக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போனது. காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தலைவரான ராகுல் காந்தி, இந்த பிரசாரத்தில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. ஆனால் தனது குறைபாடுகளை மோடி என்ற ஒற்றை நம்பிக்கையின் மூலம் மறைத்த பாஜக, அனைத்து எதிர்மறை தடைகளையும் உடைத்தெறிந்துள்ளது.

இதையும் படிங்க:Gujarat Election Result: குஜராத்தில் காங்கிரஸின் சாதனையை முறியடிக்குமா பாஜக?

Last Updated : Dec 9, 2022, 4:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details