லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் ஹஸ்ராத்கஞ்ச் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று விதான் பவனை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கு பணியிலிருந்த அலுவலர்களை கற்களைக் கொண்டு தாக்கியதில் பலரும் பலத்த காயமடைந்தனர்.
ரீட்டா பஹூகுனா ஜோஷி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்பி ஆனதன் காரணமாக இது தொடர்பான வழக்கு தற்போது எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பவன் குமார் ராய், ஆர்ப்பாட்டத்தின்போது காவல் துறையினரை தாக்கிய குற்றத்திற்காகவும், வழக்கு விசாரணையின்போது சரியாக ஆஜராக காரணத்திற்காகவும் அவர்களது பிணை கோரிக்கையை நிறுத்தி வைத்துள்ளார்.