நொய்டா: ஏறத்தாழ 100 அடி உயரத்தில் 32 அடுக்குகளுடன் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 'சூப்பர் டெக்' இரட்டைக்கோபுரங்கள் இன்று(ஆக.28) தகர்க்கப்பட்டன. நீண்ட நாட்களாக அலஹாபாத் உயர் நீதிமன்றத்திலும், இந்திய உச்ச நீதிமன்றத்திலும் நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. இந்தக் கோபுரங்கள் தலைநகரம், டெல்லியிலுள்ள குதுப் மினாரை விட உயரமான கட்டடங்கள் ஆகும்.
இந்தக்கோபுரங்கள் சுமார் 17 கோடி ரூபாய் செலவில் தகர்க்கப்பட்டுள்ளன. இது நாட்டில், வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட கட்டடங்களிலேயே மிகப்பெரும் இடிக்கும் நிகழ்வாகும். ’Water Fall' எனும் முறையில் இந்தக் கட்டடங்களை முழுமையாகத் தகர்க்க ஏறத்தாழ 9 விநாடிகள் ஆனதாம். காலை 7:30 மணியிலிருந்து உரிய அலுவலர்களால் அப்பகுதியைச்சேர்ந்த சுமார் 5,000 குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், 40 தெரு நாய்கள் தன்னார்வ நிறுவனங்களால் அப்பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டன. மேலும், கோபுரங்கள் தகர்க்கப்படுவதற்கு முன்னாள் டம்மியாக துப்பாக்கிச் சத்தத்தையும் எழுப்பி, அங்குள்ள பறவைகளையும் அகற்றிட வேண்டும் என ஓர் தன்னார்வ நிறுவனம் உரிய அலுவலர்களுக்குக் கோரிக்கை வைத்தனர்