டெல்லி:உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுள்ளதாக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் விதி மீறல் நடந்திருப்பது உறுதியானதால், இரண்டு கட்டடங்களையும் இடிக்க 2014ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு கட்டடத்தை இடிக்க உத்தரவிப்பட்டது. இதனிடையே தொழில்நுட்ப வல்லூநர் குழு 40 மாடிகள் கொண்ட கட்டடத்தை இடிப்பதற்கான வெடிபொருள் மற்றும் சென்சார் சாதனங்களை தயார் செய்யவும், அதனை பொருத்தவும் மேலும் ஒரு வாரம் வேண்டும் என்று அவகாசம் கோரியது.