தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம்; 650 லாக்கர்கள் கண்டுபிடிப்பு! - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் பணம் பறிமுதல்

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் நோய்டாவில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது.

I-T recovers huge cash
I-T recovers huge cash

By

Published : Feb 1, 2022, 4:05 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டாவில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக மறைத்துவைக்கப்பட்டிருந்த ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்த நபர் வீட்டில் சுமார் 65 லாக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முன்னாள் அதிகாரி சமாஜ்வாதி கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும், தற்போது அங்கு சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் செலவுக்காக இவரிடம் பெருந்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வருமான வரித்துறை இதுவரை வெளியிடவில்லை. இந்த பணத்தின் மூலம் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ராகு கேது சிலைகளை உடைத்த டெல்லி இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details