தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாண்டிய, சோழ, பல்லவ பேரரசுகளின் வரலாறு எங்கே..? - உள்துறை அமைச்சர் அமித்ஷா! - பாண்டிய பேரரசு

வரலாற்று அறிஞர்கள் புகழ்பெற்ற பாண்டிய, சோழ, பல்லவ பேரரசுகளின் ஆட்சியை புறக்கணித்துவிட்டு, முகலாயர்களை மையப்படுத்தியே வரலாற்றை எழுதியுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

amit-shah
amit-shah

By

Published : Jun 11, 2022, 4:52 PM IST

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "பல இந்திய மன்னர்கள் தங்களது தாய் நாட்டை பாதுகாக்க, அந்நிய படையெடுப்புகளை துணிச்சலாக எதிர்த்துப் போரிட்டு தோற்கடித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இது வரலாற்றில் பெரிய அளவில் இடம் பெறவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக கலாச்சாரம், மொழி, மதம் ஆகியவற்றிற்கான நமது போராட்டம் வீண்போகவில்லை.

இன்று இந்தியா உலக அரங்கில் மீண்டும் மரியாதையுடன் நிற்கிறது. நம்மிடம் பல பேரரசுகள் இருந்தன. ஆனால், வரலாற்றாசிரியர்கள் முகலாயர்களை மட்டுமே மையமாக வைத்து வரலாற்றை எழுதியுள்ளனர். பாண்டிய பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. பல்லவ மற்றும் சோழ மன்னர்களும் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

மவுரியர்கள் ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தப் பேரரசர்கள் நாடு முழுவதும் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் அவ்வளவாக இடம்பெறவில்லை. இந்த சாம்ராஜ்ஜியங்களைப் பற்றிய புத்தகங்கள் எழுதப்பட வேண்டும்.

அவை எழுதப்பட்டால், நாம் தவறாக நம்பிக் கொண்டிருக்கும் வரலாறு படிப்படியாக மறைந்து, உண்மை வெளிப்படும். இதற்கான பணிகளை தொடங்க வேண்டிய நிலை உள்ளது. வரலாற்றை புதிதாக எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. சிலர் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றை எழுதியுள்ளனர்.

ஆனால், இந்தியாவில் பொய்யான வரலாறு நிலைக்காது. சில வரலாற்றாசிரியர்கள் சிறிய அளவில் சில புத்தகங்களை எழுதியுள்ளனர். ஆனால் முழு நாட்டின் வரலாற்றைப் பற்றிய எந்த ஒரு விரிவான பணியையும் யாரும் செய்யவில்லை. கடந்த காலத்தின் பெருமையை நிகழ்காலத்திற்கு கடத்துவதே வரலாற்றின் பணி. அதன்படி வரலாற்றாசிரியர்கள் எழுத வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details