ஹைதராபாத்:1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மறைந்துவிட்டதாக சில சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், தனது தந்தை தனது தந்தை நலமுடன் நலமாக இருப்பதாகவும் ஈடிவி பாரத்திற்கு அவரது மகள் நந்தனா சென் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரதிடம் பேசிய நந்தனா, "இது பொய்யான செய்தி, பாபா முற்றிலும் நலமாக இருக்கிறார்," என்று அவர் கூறினார். சிறிது நேரத்தில் நந்தனாவும் தனது தந்தையின் நலம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி, ஆனால் இது பொய்யான செய்தி: பாபா முற்றிலும் நலமாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு அற்புதமான வாரத்தை நாங்கள் ஒன்றாகக் கழித்தோம் - நேற்றிரவு நாங்கள் விடைபெறும் போது அவரது அரவணைப்பு எப்பொழுதும் போல் வலுவாக இருந்தது! அவர் வாரத்திற்கு 2 படிப்புகள் கற்பிக்கிறார். ஹார்வர்டில், தனது பாலினப் புத்தகத்தில் வேலை செய்கிறார். எப்போதும் போல் பிஸியாக இருக்கிறார்!" என ட்வீட் செய்துள்ளார்.
அக்டோபர் 10, 2023 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டின் (@profCGoldin) எனப் பெயரிடப்பட்ட போலி 'X' பக்கத்திலிருந்து இந்த தவறான செய்தி பரவியதாக தெரியவருகிறது. அப்பதிவில், "ஒரு பயங்கரமான செய்தி. எனது அன்பான பேராசிரியர் அமர்த்தியா சென் சில நிமிடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வார்த்தைகள் இல்லை" எனக் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, உண்மைத்தன்மையை உறுதி செய்ய முயன்ற ஈடிவி பாரத், மற்றும் உண்மையான கிளாடியா கோல்டினுக்கு (@PikaGoldin) வேறு அதிகாரப்பூர்வ X கணக்கு இருப்பதை கண்டறிந்தது.