நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் மாத இறுதியில் நடத்தப்படுவது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் 3ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் அனுப்பினார். அதில், விவசாயிகளின் போராட்டம், கரோனா தடுப்பூசி, சீன ஊடுருவல், பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையின்மை போன்ற நாட்டின் முக்கியப் பிரச்னைகள் குறித்து குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க ஏதுவாக, குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று கோரியிருந்தார்.