பெகாசஸ் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கிவரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், பெகாசஸ் மென்பொருளின் உரிமையாளரான என்.எஸ்.ஓ குழுமத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எந்தவித வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மக்களவையில் இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து பதிலளித்தார். அதில், இந்தியாவில் முறைகேடான ஒட்டுக்கேட்பு என்பது சாத்தியமற்ற ஒன்று என்றார்.