டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணியிடம் 5-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 2-2 என்று சமநிலையில் இருந்த நிலையில், இரண்டாவது பாதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெல்ஜியம் 5-2 என வெற்றிபெற்றது.
அணியின் தோல்வி குறித்து கேப்டன் மன்பிரீத் சிங் பேசுகையில், "வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களம்கண்ட அணி கடின உழைப்புக்குப் பின் தோல்வியைச் சந்தித்தது வருத்தமளிக்கிறது.
இருப்பினும் அணியின் இலக்கு வெண்கலப் பதக்கத்தை வெல்லதே ஆகும். நீண்ட காலத்திற்குப் பின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. போட்டியில் தோல்வி அடைந்தது கவலை தந்தாலும், நாட்டிற்காகப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் மனத்தில் உள்ளது" என்றார்.
இந்தப் போட்டியில் அணி செய்த தவறுகளைக் கண்டறிந்து, அடுத்து வரும் போட்டிகளில் அதைக் களைவதற்கான முயற்சியைச் செய்யவுள்ளோம் என மன்பிரீத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியுடன் பெல்ஜியம் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. தோற்கும் அணியுடன் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மோதவுள்ளது.
இதையும் படிங்க:எனது பயணம் இத்துடன் நிற்காது- பி.வி. சிந்து