தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புகைப்பிடிப்பதை தடுக்க விரைவில் 'Stop Tobacco' செயலி! - செல்போன் செயலி

கர்நாடகாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க, ஜிபிஎஸ் அடிப்படையிலான ஸ்டாப் டொபாக்கோ 'Stop Tobacco' என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

No smoking i
No smoking i

By

Published : Dec 16, 2022, 5:56 PM IST

பெங்களூரு: பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க கர்நாடக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புகைப் பிடிப்பதை தடுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான "ஸ்டாப் டொபாக்கோ" என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தாலோ, அதனை புகைப்படமாக எடுத்து, 'ஸ்டாப் டொபாக்கோ' செயலியில் பதிவேற்றம் செய்து புகார் அளிக்கலாம்.

இதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இருப்பதால் குறிப்பிட்ட இடம் சரியாக கண்டுபிடிக்கப்படும். பின்னர் அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். இத்திட்டத்திற்காக அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. இந்த செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் - எங்கெங்கு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details