காங்கிரஸ் கட்சி குறித்து பிரசாந்த் கிஷோர் முக்கிய கருத்தை இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், "லக்கிம்பூர் வன்முறைக்குப்பின் நடைபெற்ற நகர்வுகளை வைத்து காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைந்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நனவாகும் என பலரும் நம்பினால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
நாட்டின் மூத்த அரசியல் கட்சியான காங்கிரசில் உள்ள ஆழமான சிக்கல்களை குறுகிய கால தீர்த்துவைக்க முடியாது. கட்டமைப்பு ரீதியாக காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. நம்மைச் சுற்றி நாட்டிற்குள் துயரான சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், நல்லெண்ணத்தை விதைப்பதாகக் கூறி போலி கருத்துருவங்கள் பரப்பப்படுகிறது.
நல்லெண்ணம் கொண்டவர்களாக நாம் இருக்க, அரசின் கண்மூடித்தனமான கருத்துருவாக்கிகளாக நாம் மாறிவிடக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.
லக்கிம்பூரும் விவகாரமும் பிரசாந்த் கிஷோர் கருத்தும்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி இருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தைச் சந்திக்க பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசம் சென்ற நிலையில் அவர் காவலில் வைக்கப்பட்டார். பின்னர், ராகுல் காந்தியும் லக்கிம்பூர் செல்ல அனுமதி கேட்க, இறுதியில் உத்தரப் பிரதேச அரசு பிரியங்கா, ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கியது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ராகுல், பிரியங்காவின் இந்த செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி தரும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதன் பின்னணியில்தான் பிரசாந்த் கிஷோர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் முயற்சி மேற்கொண்டுவருவதாகவும், அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசியல் வட்டரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:2021 அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இரு ஊடகவியலாளர்கள்