டெல்லி:இதுகுறித்து மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் விடுப்பு விதிகள், 1972இல் மாதவிடாய் விடுப்புகளுக்கான விதிமுறைகள் கிடையாது.
இந்த விதிகளில் மாற்றம் கொண்டுவந்து மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை. மேற்கூறிய விதிகளின் கீழ், ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவச் சான்றிதழ் விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் பெண் அரசுப் பணியாளருக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.