டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று(பிப்.10) அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், மத்திய அரசு அலுவலகங்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் திட்டம் கிடையாது. அப்படியொரு திட்டம் பரிசீலனையில் இல்லை.
இந்த திட்டம் நாட்டில் கரோனா தொற்று உச்சமடைந்திருந்த நேரத்தில், பொருளாதார மீட்புக்காக பரிசீலனை செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் தேவைப்படாது என்று தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில், தொழிலாளர் பாதுகாப்பு சட்ட மசோதா 2020 கீழ், அரசு பணியாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் திட்டம் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹிஜாப் விவகாரத்தை பெரியளவில் எடுக்க வேண்டாம் - உச்ச நீதிமன்றம்