இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து திட்டம் உள்ளதா? என்று எலான் மஸ்க்கிடம் ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், டெஸ்லா கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்காத இந்தியாவில், எந்த இடத்திலும் டெஸ்லா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில், வாகனங்களின் இறக்குமதி வரி அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்கலாம், ஆனால் சீனாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்துவிட்டு இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத் சென்ற பிரதமர் மோடி - பெண்கள் அளித்த பாரம்பரிய வரவேற்பு