இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்று பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா தடுப்பூசிகளை யாரும் சந்தேகிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசிகளை யாரும் சந்தேகிக்க கூடாது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் - ஹர்ஸ் வர்தன்
டெல்லி: கரோனா தடுப்பூசிகளை யாரும் சந்தேகிக்கக் கூடாது என்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
ஹர்ஸ் வர்தன்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன். இதுவரை, நாடு முழுவதும் மொத்தமாக 3,93,39,817 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கடைசி 24 மணி நேரத்தில், புதிதாக 39,726 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,654 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்" என்றார்.