ஹவேரி (கர்நாடகா):ரஷ்யா-உக்ரைனுக்கு இடையேயான போர் இன்று(மார்ச்.1) 6ஆவது நாளாகத் தொடர்கிறது. இன்று கார்கிவ் நகரில் ரஷ்யப்படை நடத்தியத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த கர்நாடகா மாநில மாணவன் நவீன் சேகரப்பா ஞானகவுடா உயிரிழந்தார். நவீன் கார்கிவ் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.
நவீன் உயிரிழந்த செய்தியறிந்து ஹவேரியில் உள்ள அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்த மாணவனின் தந்தை சேகரப்பா கூறுகையில், கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதற்காக இந்தியத் தூதரகத்தில் இருந்து யாரும் அணுகவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.