தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கங்குலிக்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை - மருத்துவர்கள் - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

By

Published : Jan 3, 2021, 4:26 PM IST

கொல்கத்தா:பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி நேற்று (ஜன.2) நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ரத்த குழாயினை விரிவுபடுத்துவற்காக முதல்கட்டமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரது உடல்நிலையை பொறுத்து மேலும் ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்வது தொடர்பான நாளை (ஜன.4) முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சவுரவ் கங்குலியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

ABOUT THE AUTHOR

...view details