கொல்கத்தா (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பீமன் போஸ் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தங்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்த பிளவும் இல்லை என தெரிவித்தவர், சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் இரு கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து பாஜக, திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிப்போம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதங்களின் இரு துருவங்களாக உள்ள இக்கட்சிகளிடமிருந்து மேற்கு வங்கத்தை காப்பாற்றி ஆக வேண்டியுள்ளது. எனவே பாஜக, திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறினார்.
கர்நாடகத்தில் அமலுக்கு வரும் பசுவதை தடுப்பு சட்டம்!
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறவுள்ளது. இதில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸை எதிர்த்து பாஜக களமிறங்கியுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து வரவிருக்கும் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநிலத்தின் மூத்த தலைவர்கள் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.