தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தி - ட்விட்டர் இடையே மீண்டும் பூசல் - ட்விட்டர் நிறுவன செய்தி தொடர்பாளர்

பாலோயர்கள் எண்ணிக்கை தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் ட்விட்டர் நிறுவனம் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jan 27, 2022, 12:49 PM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ட்விட்டர் வலைத்தளம் தன்னுடைய பாலோயர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக தடுத்து குறைத்துத்துவைக்கிறது.

என்னை பின்பற்றும் பாலோயர்கள் எண்ணிக்கை 19.5 மில்லியனில் அப்படியே உறைந்து நிற்கிறது. மாதம் எண்ணை புதிதாக இரண்டு லட்சம் பேர் பின்தொடர்ந்துவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துள்ளது எனக் கடிதத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கு ட்விட்டர் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில், ராகுல் காந்தியின் பாலோயர்கள் எண்ணிக்கையில், எந்த குளறுபடியும் இல்லை. எங்கள் தளம் போலி, மிகப்படுத்தபட்ட செய்திகளுக்கு எதிரானது. எனவே, உண்மையான அக்கவுண்டுகளை மட்டுமே ட்விட்டர் தனது தளத்தில் அனுமதிக்கும். எங்கள் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் ஸ்பேம், போலி அக்கவுண்டுகளை நாங்கள் தொடர்ந்து நீக்கிவருகிறோம். இதை எங்கள் வெளிப்படைத் தன்மை மையத்தில் தொடர்பு கொண்டு நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என ட்விட்டர் பதில் அளித்துள்ளது.

ஏற்கனவே, ஹத்ராஸ் விவகாரத்தில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு சிறிது காலத்திற்கு முடக்கப்பட்டிருந்தது. அப்போதும் ட்விட்டர் மற்றும் ராகுல் காந்திக்கு இடையே பூசல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரயில்வே தேர்வு குளறுபடி - பிகார் மாநிலத்தில் பந்த்க்கு அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details