பெங்களூரு:மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு, பொதுமுடக்கம் (லாக் டவுன்) அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், சுகாதார அலுவலர்களுடன் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், “மாநிலத்தில் கோவிட் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும்.
மக்கள் கோவிட் நெறிமுறைகளுக்கு உள்பட்டு நடக்க வேண்டும். தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் நிலைமை மிகவும் கடுமையாக மாறிவிடும். எனினும் மாநிலத்தில் பொதுமுடக்கம், லாக் டவுன் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை” என்றார். பெங்களூருவில் கடந்த ஒரு நாளில் 2,004 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.