தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்ததா? உள்துறை அமைச்சகம் விளக்கம் - டிஆர்பி ஊழல் குறித்த விசாரணை

டிஆர்பி ஊழல் குறித்த விசாரணையின்போது, சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த உரையாடல் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

By

Published : Mar 17, 2021, 11:06 AM IST

மும்பை காவல்துறை டிஆர்பி ஊழல் குறித்த விசாரணையை மேற்கொண்டபோது, சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த உரையாடல் உள்ளிட்ட சில ரகசிய மற்றும் முக்கிய வாட்ஸ்அப் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அத்தகைய முக்கியமான உரையாடல்கள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து "இதுபோன்ற தகவல்கள் எதுவும் அரசாங்கத்தின் கவனத்திற்கு வரவில்லை" என்று உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "டிஆர்பி ஊழல் குறித்து மும்பை காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது வெளிவந்த, ரகசிய மற்றும் முக்கியமான தகவல்கள் குறித் வாட்ஸ்அப் உரையாடல்களில் எதேனும் கசிவு ஏற்பட்டுள்ளதா" என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. டிஆர்பி வழக்கில் மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு வாட்ஸ்அப் உரையாடலின் நகல் ஊடகங்களிடம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயிலுக்கு 3000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details