கரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், பர்மிட் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு கட்டமாக நீட்டித்து வருகிறது.
அதன்படி, காலவதியான அனைத்து ஆவணங்களும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து கனரக வாகனங்களின் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதியே கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டது.