தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 10, 2020, 8:19 PM IST

ETV Bharat / bharat

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு; முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

10 மற்றும் 12 வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பொதுத்தேர்வு தேதி தள்ளிவைக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்துள்ளார்.

Ramesh Pokhriyal Nishank
Ramesh Pokhriyal Nishank

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்களிடம் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது நடப்பாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், வரும் ஆண்டில் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உரிய நேரம் வழங்கப்படும் எனவும், மார்ச் மாதம் தான் தேர்வு வைக்க வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை என்றார். கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்திற்கு ஏற்றார்போல் தேர்வுகளுக்கான தேதிகள் தள்ளிவைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பள்ளிகள் திறப்பை அந்தந்த மாநிலங்கள் கள சூழலுக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கலாம் என்று கூறிய அமைச்சர், மாணவர்களின் கஷ்டம் உணர்ந்து நடப்பாண்டு பாடத்திட்டம் 30 விழுக்காடு குறைக்கப்படும் எனவும் கூறினார்.

மதிப்பெண் அறிக்கையில் பெயில் (fail) என்ற வார்த்தையே நீக்கப்படும், எந்தவொரு மாணவரும் பெயில் செய்யப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க:மிகவும் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பெற்ற நிர்மலா சீதாராமன்!

ABOUT THE AUTHOR

...view details