டெல்லி:நாகலாந்துக்கு என தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு விவகாரத்தில் இந்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது என நாகலாந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் - ஐஸ்சக் முய்வா (NSCN--IM) பிரிவு தெரிவித்துள்ளது.
1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாகலந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் அமைப்பு, நாகலிம் என்ற தனி நாடு, நாகர் என மக்களுக்கு என தனி தேசியக் கொடி, அரசியலமைப்பு, தனி பாஸ்போர்ட் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
தனி அரசியலமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு, நாகலந்து தேசிய சோசியலிஸ்ட் - ஐசக் முய்வா (NSCN--IM) பிரிவுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசு நடத்திய 80 கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில், தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு உள்ளிட்ட விவகாரத்தில் நாகர் அமைப்பினர் விடாப் பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
நாகா தேசியக் கொடி மக்களுடன் இணைக்கப்பட்ட உணர்வுப்பூர்வமானது என்றும், கடவுள் கொடுத்த வரலாறு என்றும் நாகலந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் அமைப்பு பேச்சுவார்த்தையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன் நாகலந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, நாகலந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சிலின் தனி தேசியக் கொடி, தனி அரசியலமைப்பு கோரிக்கைகளை நிராகரித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனி கொடி, தனி அரசியலமைப்பு பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க:ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் விளக்கம் கேட்கும் ஆளுநர் - தள்ளிப்போடும் முயற்சியா?