சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக ஒரு வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை இந்திய - திபெத் எல்லைக் காவல்படையும், உள்ளூர்வாசிகளும் இணைந்து திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அரசு விளக்கம்
இந்த வீடியோ குறித்து அரசு தரப்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது பழைய வீடியோ என்றும், அதிலிருப்பவர்கள் சில உள்ளூர் நாடோடிகள் என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அரசு அலுவலர் ஒருவர், ”இது முதல் தடவையாக நடக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. சில உள்ளூர்வாசிகள் அங்கு கூடாரங்கள் அடித்து செல்லப்பிராணிகளுடன் சுற்றித் திரிகின்றனர்.