இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கான முன்பதிவு கோவின் என்ற இணையதளத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
ஆதார் தேவையில்லை
கோவிட்-19 தடுப்பூசிக்கான முன்பதிவு செய்வதற்கு ஆதார் மற்றும் தொலைபேசி எண் கட்டாயம் என்று இருந்துவந்த நிலையில், தற்போது ஆதார் எண் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மூன்றாம் அலை, டெல்டா ரக வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கிலேயே இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை, 30.65 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 25.33 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 5.32 கோடி பேருக்கு இரண்ராம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'படி, படி, படி..' - புதுச்சேரி முதலமைச்சரின் ஆட்டோகிராப்