தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடை செய்யப்பட்ட என்.எல்.எஃப்.டி. அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் கைது - திரிபுரா தேசிய விடுதலை முன்னணி

விசாரணையில், தடை செய்யப்பட்ட அமைப்பான திரிபுரா தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரிடம் பணத்தை கொடுப்பதற்காக அவர்கள் காத்திருந்ததாக தெரிவித்தனர்.

NLFT insurgent among four arrested in Tripura
NLFT insurgent among four arrested in Tripura

By

Published : Jan 21, 2021, 7:34 PM IST

அகர்தலா: திரிபுரா தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ. 15 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கண்டசேராவின் ரயிஷ்யபாரி மார்கெட் பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், தடை செய்யப்பட்ட அமைப்பான திரிபுரா தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரிடம் பணத்தை கொடுப்பதற்காக அவர்கள் காத்திருந்ததாக தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொரு நபரை கைது செய்தோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி 1997ஆம் ஆண்டு திரிபுரா தேசிய விடுதலை முன்னணி அமைப்பு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details