ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தில் உதவிஆசிரியராக பணியாற்றி வந்த நிவேதிதா சூரஜ் இன்று (நவம்பர் 19) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கும் சூரஜ்-பிந்து தம்பதியின் மகள் நிவேதிதா. இவர் ஊடகத்துறையில் பட்டம்பெற்றவர். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தின் கேரள பிரிவில் உதவிஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
ஹைதராபாத்தின் பாக்யலதாவில் தங்கியிருந்த நிவேதிதா நாள்தோறும் அலுவலக பேருந்து மூலமாக பணிக்கு சென்றுவருவது வழக்கம். அதேபோல மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோனாலி சாவ்ரே என்பவரும் ஈடிவி பாரத் ஊடகத்தின் உத்தரப் பிரதேச பிரிவில் உதவிஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவரும் பாக்யலதாவிலிருந்து அலுவலக பேருந்தில் பணிக்கு சென்றுவருவார். அந்த வகையில், இருவரும் இன்று அதிகாலை 5 மணி அளவில் வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டனர்.