தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டம், ஒழுங்கு பிரச்னை, பொறுமையிழந்த நிதிஷ் குமார்! - நிதிஷ் குமார்

பிகாரில் சட்டம் ஒழுங்கு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பொறுமை இழந்தார்.

Nitish questioned about law and order in Bihar, loses cool
Nitish questioned about law and order in Bihar, loses cool

By

Published : Jan 15, 2021, 4:52 PM IST

பாட்னா: பிகார் தலைநகர் பாட்னாவில் நடந்த விழாவில் கலந்துகொண்ட மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர் ஒருவர் இண்டிகோ விமான நிலைய மேலாளர் ரூபேஷ் குமார் சிங் (40) படுகொலை தொடர்பாக கேள்வியெழுப்பினார்.

மேலும் பிகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். செய்தியாளரின் இந்தக் கேள்வி முதலமைச்சர் நிதிஷ் குமாரை பொறுமை இழக்க செய்துவிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், செய்தியாளர் மீது கடுமையாக சாடினார். செய்தியாளரை பார்த்து, “நீங்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவாளரா? எனப் பதில் கேள்வியெழுப்பினார்.

சட்டம், ஒழுங்கு பிரச்னை, பொறுமையிழந்த நிதிஷ் குமார்!

ரூபேஷ் குமார் சிங் கடந்த 12ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பிகார் அரசு மே.வங்க தேர்தல் வரை நீடிக்கும்'- பூபேஷ் பாகல்

ABOUT THE AUTHOR

...view details