டெல்லி:பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளத்தின் (JDU) தலைவராக இன்று (டிச.29) நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளத்தின் (JDU) தலைவராக நியமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டு, கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த லாலன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் கட்சித் தலைவருக்கான பதவி காலியானது. இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமை பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறும்போது, “ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த லாலன் சிங், அடுத்த தலைவராக நிதிஷ்குமார் பெயரை முன்மொழிந்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் இரண்டு நாள் கூட்டத்தின்போது, லாலன் சிங் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், கூட்டத்தில் பேசிய லாலன் சிங், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது தொகுதியின் வேலை காரணமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடுத்த தலைவராக நிதிஷ்குமார் பெயரை முன்மொழிந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.