தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்னை உண்மையான சோசியலிஸ்ட் என அழைத்த பிரதமருக்கு நன்றி - நிதீஷ் குமார் நெகிழ்ச்சி - பிரதமர் மோடி நிதீஷ் குமாரை பாராட்டு

தன்னை உண்மையான சோசியலிஸ்ட் என அழைத்த பிரதமர் மோடிக்கு நன்றி என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

Nitesh Kumar
Nitesh Kumar

By

Published : Feb 14, 2022, 6:52 PM IST

பிரதமர் நரேந்திர மோடி அன்மையில் பிகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவை விமர்சிக்கும் விதமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், லாலு பிரசாத் யாதவ் போன்றோர் எல்லாம் சோசியலிஸ்டுகள் அல்ல. இவர்கள் வாரிசு அரசியல் செய்பவர்கள். குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர்கள். லோஹியாவின் வழி நின்றவர்களே உண்மையான சோசியலிஸ்டுகள்.

லோஹியாவின் குடும்ப உறுப்பினர்களோ, ஜார்ஜ் பெர்னான்டசின் குடும்ப உறுப்பினர்களோ, நிதீஷ் குமாரின் குடும்ப உறுப்பினர்களோ எங்காவது கட்சி அரசியல் அதிகாரத்தில் வந்து நீங்கள் பார்த்துள்ளீர்களா. இவர்கள்தான் உண்மையான சோசியலிஸ்டுகள் என பிரதமர் பாராட்டி பேசினார்.

பிரதமரின் இந்த பாராட்டுக்கு பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் எங்கள் மாணவப் பருவத்திலேயே சோசியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தோம். எங்களின் அரசியல் நேர்மையை புரிந்துகொண்ட பிரதமர் பேசியுள்ளது மகிழ்ச்சி தருகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஹிஜாப் அணியவில்லை என்றால் பாலியல் தொல்லை ஏற்படும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

ABOUT THE AUTHOR

...view details