தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட்டுக்கு முன்பான ஒன்பதாவது ஆலோசனை கூட்டம்! - மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பட்ஜெட்டுக்கு முன்பான ஒன்பதாவது ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கலந்துகொண்டார்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

By

Published : Dec 19, 2020, 2:36 PM IST

அடுத்தாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முன்பான ஒன்பதாவது ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கலந்துகொண்டார்.

இதுகுறித்து நிதித்துறை அமைச்சகத்தின் அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2021-22 சுகாதாரம்ஆண்டுகக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில், தொழிற்சாலை, வர்த்தக மற்றும் சேவை துறை தலைவர்களுடன் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டுக்கு முன்பான ஆலோசனையில் பங்கேற்றார்.

நிதித்துறை செயலாளர் ஏ.பி. பாண்டே, வருவாய் துறை செயலாளர் டி.வி. சோமநாதன், பொருளாதார விவகாரத் துறை செயலாளர் தருண் பஜாஜ், தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்" என பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக, டிசம்பர் 17ஆம் தேதி, தேசிய தலைநகர் டெல்லியில் முன்னணி தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு முன்பான ஆலோசனையில் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டார்.

ABOUT THE AUTHOR

...view details