திருவனந்தபுரம் : கேரளத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில் வௌவால்களை நிபா வைரஸின் ஆதாரமாக கருதலாம் என மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய சோதனைகள், சிறுவனின் வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வகை வெளவால்களுடன் வைரஸின் தொடர்பைக் தெளிவுப்படுத்தியுள்ளன.
இது தவிர மீதமுள்ள மாதிரிகள் விரிவாக பரிசோதிக்கப்படுகின்றன” என்றார். தொடர்ந்து, கடந்த 3 வாரங்களாக மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை வீணா நிம்மதி பெருமூச்சுடன் கூறினார்.