கோழிக்கோடு (கேரளா): கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிகளில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. நிபா வைரஸ் அதிகரிப்பால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது 39 வயது கொண்ட நபர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது வரை அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றன.
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தலைமையில் புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பிரதமர் மோடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வழிகாட்டின்படி கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் குறித்து உன்னிப்பாக கண்காணித்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:Kerala Nipah virus: கேரளாவில் நிபா வைரஸ்.. தென்காசி எல்லையில் தடுப்பு பணிகள் தீவிரம்!
கேரளாவில் நிபா வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளன. கேரளா கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், புனேவிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மாநில சுகாதாரத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் நிபுணர்களுடன் இணைந்து வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த உயர்மட்டக் குழு, முழு உபகரணங்கள் உடன் தயார் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க தனிமைபடுத்தப்பட்ட இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன மேலும் BSL-3 ஆய்வகங்கள் பொருதத்தப்பட்ட உயர்மட்ட குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த செயலாக்க முறையை அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:நிபா வைரஸ் எதிரொலி: தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!