தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலங்கையில் சிக்கித் தவிக்கும் ஜார்க்கண்ட் தொழிலாளர்கள்! - ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் 19 பேர் இலங்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

migrant laborers
migrant laborers

By

Published : May 2, 2022, 5:07 PM IST

ஹசாரிபார்க் (ஜார்க்கண்ட்): தீவு நாடான இலங்கை தற்போது திவாலாகும் நிலையை எட்டியுள்ளது. அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நாட்டுக்கு சென்ற ஜார்க்கண்ட் மாநில குடிகள் தற்போது அங்கு உணவு, உறைவிடம் இன்றி துயரப்படுகின்றனர். இதற்கிடையில் வேலை கொடுத்த நிறுவனம் 19 பேரின் பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) ஆகியவற்றையும் பறிமுதல் செய்துகொண்டது.

இதனால் பெருந்துயரில் உள்ள இவர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பேட்டியளித்த சமூக ஆர்வலர் சௌகத் அலி, “ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் வெளிநாட்டில் சிக்கிக் கொள்வது இது முதல்முறையல்ல.

கடந்த வாரம் மலேசியாவில் 30 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டனர். இதேபோல் இலங்கையில் சிக்கியுள்ள தொழிலாளர்களும் மீட்கப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details