கடக்:கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில் உள்ள ஒரு அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் நேற்று (டிசம்பர் 19) நான்காம் வகுப்பு படிக்கும் பாரத்(9) எனும் மாணவன் சக மாணவர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அதே பள்ளியில் பணிபுரியும் கைவுரவ ஆசிரியர் முட்டு ஹடலி என்பவர் மாணவனை மண்வெட்டியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுவன் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் தனது தாய் கீதாவிடம் ஓடியுள்ளார். இருப்பினும் முட்டு ஹடலி கீதாவையும் தாக்கியுள்ளார். அப்போது மாணவனுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. சக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அருகில் உள்ல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாணவனின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.