இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தனிந்துள்ள நிலையில், பல மாநிலங்கள் கல்வி நிறுவனங்களை திறக்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
மூன்றாம் அலை ஏற்பட்டால் அது சிறார்களையே அதிகம் தாக்கும் என்ற அச்சம் நிலவும் நிலையில், ஆந்திர பிரதேசத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் பரிசோதனை நடத்தியபோது, இரு பள்ளிகளைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து இந்த இரு அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆப்கனிலிருந்து 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு