கொச்சி: கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர், சிறுமியுடன் நட்பாகப் பேசியுள்ளார். பின்னர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அருகில் இருந்த தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்த விடுதியின் உரிமையாளர் உள்பட மேலும் மூவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த விடுதியிலிருந்து தப்பித்து மீண்டும் பேருந்து நிலையம் வந்தபோது, மற்றொரு நபர் தான் வேலை தருவதாகக்கூறி சிறுமியை அழைத்துச்சென்றுள்ளார். அவர் மற்றொரு விடுதிக்கு அழைத்துச்சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கும் விடுதி உரிமையாளர் உள்பட இருவர் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர்.
பிறகு, பாலியல் தொழில் சார்ந்த தொடர்பு உள்ள பெண்மணி ஒருவரிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளனர். அந்த பெண்மணியின் தொடர்பில் இருந்த பலரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்ததாகத் தெரிகிறது.