இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. எந்த முயற்சியும் விடுபடவில்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் செயற்கை சுவாச வசதி முதல் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு ஆஷா பணியாளர்கள் தினசரி வழிகாட்டுதல் வழங்குவதுவரை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இரவு நேர லாக்டவுன்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு - corona lock down
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
![புதுச்சேரியில் இரவு நேர லாக்டவுன்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு fdas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11466670-thumbnail-3x2-soun.jpg)
இரவு 8 மணிவரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம். உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். 8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. கடற்கரையில் காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே அனுமதி. அதற்கு மேல் அனுமதி கிடையாது.
அதேபோல இரவு நேர ஊரடங்கு இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.