சென்னை:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 350 பேருக்கு உறுதியாகி உள்ளது.
மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இரவு ஊரடங்கை அமல்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து, தொற்று அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க:உ.பி.யில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: தமிழ்நாட்டிலும் ஊரடங்கா?