அண்மைக் காலமாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவருகிறது. அதன் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளில் மீண்டும் கவனம் செலுத்திவருகின்றன.
அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் இரவு நேர பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களான லக்னோ, வாரணாசி, கான்பூரில் இன்றுமுதல் (ஏப். 8) இரவு நேர பொதுமுடக்கம் உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.