கேரளா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகமாக பதிவாகிறது. நாட்டிலேயே தொற்று அதிகமுள்ள மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
பக்ரீத், ஓணம் ஆகிய பண்டிகைகள் காரணமாக கொடுக்கப்பட்ட தளர்வுகளால் மாநிலத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. தினசரியாக சுமார் 17 ஆயிரமாகத் தொற்று பதிவாகிவந்த நிலையில், தற்போது 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
அதிகரிக்கும் கரோனா பாதிப்பு- கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல் - kerala news
கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
![அதிகரிக்கும் கரோனா பாதிப்பு- கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல் பினராயி விஜயன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12907883-thumbnail-3x2-kerala.jpg)
பினராயி விஜயன்
அதன்படி கேரளாவில் வரும் திங்கட்கிழமை (நாளை 30) முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று வார விடுமுறையை நாள் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் மாநிலத்தில் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.