தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Omicron Spreads: இரவு நேர ஊரடங்கு நடைமுறை

Omicron Spreads:ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கேரளா, உத்ரகாண்ட் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

omicron Spreads  night curfew  night curfew due to omicron spreading  night curfew announed in kerala  night curfew announed in uttarakhand  இரவு நேர ஊரடங்கு  கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல்  நான்கு நாள்களுக்கு ஊரடங்கு  ஓமைக்ரான் அச்சுறுத்தல்
இரவு நேர ஊரடங்கு

By

Published : Dec 27, 2021, 8:00 PM IST

Omicron Spreads: நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைத் திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் இரவு ஊரடங்கை அமல்படுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இரவு நேர ஊரடங்கு

இந்நிலையில் கேரளா, உத்ரகாண்ட் மாநிலங்களில் வருகிற 30ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கும் விதமாக கேரளாவில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையும், உத்தரகாண்ட்டில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Niti Ayog Health Index: இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு

ABOUT THE AUTHOR

...view details