பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் நைஜீரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அரைநிர்வாணமாக வீதிகளில் சுற்றித்திரிந்தார். அவர், அரை நிர்வாணமாக குழந்தைகள், பெண்களிடம் சென்று பேசி அவர்களை சங்கடமாக உணர வைத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அரை நிர்வாணமாக சுற்றித்திரிந்த நைஜீரிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.