வங்கதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமூகரான நபீஸ் என்பவரை சென்னையைச் சேர்ந்த பெண் திருமணம் கடந்தாண்டு செய்துகொண்டார். லண்டனில் படித்துக்கொண்டிருந்த இந்தப் பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறி வங்கதேசப் பிரமுகரை மணமுடித்த நிலையில், இந்த திருமணத்திற்கு எதிராக சென்னையில் உள்ள அவரது தந்தை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு புகார் அளித்திருந்தார்.
அதில், லண்டனில் படித்துக்கொண்டிருந்த தனது மகளை கடத்திச்சென்று கட்டாயமாக மதம் மாற்றி இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர் என புகார் அளித்திருந்தார். வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு முகமை இவ்விவகாரத்தில் சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளரான ஜாகிர் நாயக்குக்கும் தொடர்புள்ளது என தெரிவித்துள்ளது.