தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்ரோடா தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்! - தேசிய புலனாய்வு முகமை

டெல்லி: நக்ரோடா தாக்குதல் குறித்த விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை
தேசிய புலனாய்வு முகமை

By

Published : Dec 4, 2020, 4:12 PM IST

ஜம்மு காஷ்மீர் நக்ரோடா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த நவம்பர் 19ஆம் தேதிநடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், காவல் துறையைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 15 நாள்கள் ஆன நிலையில், இத்தாக்குதல் குறித்த விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்ஐஏவின் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "மத்திய அரசு ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே இடத்தில் ஜனவரியில் நடைபெற்ற தாக்குதல் குறித்தும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டுவருகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details