ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியனில் உள்ள 16 இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இந்தச் சோதனையானது அனந்த்நாக், ஸ்ரீநகர், பாரமுல்லா, குல்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரை சுற்றி வளைத்த என்ஐஏ.. 16 இடங்களில் ரெய்டு! - ரெய்டு
ஜம்மு காஷ்மீரின் 16 இடங்களில் என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை) அலுவலர்கள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
NIA
சிலரின் மொபைல் போன்களையும் என்ஐஏ அலுவலர்கள் கைப்பற்றி சோதனை நடத்திவருகின்றனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பத்னாடி (Bathnadi) பகுதியில் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் என்ஐஏ அலுவலர்கள் இது தொடர்பாகவும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : ஹெராயின் கடத்தல் விவகாரம்: கோவையில் என்ஐஏ அலுவலர்கள் ஆய்வு!